சிக்கிம் விபத்தில் உயிரிழந்த பாலக்காடு ராணுவ வீரர்… கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட உடலுக்கு ராணுவ மரியாதை!

சிக்கிம் விபத்தில் உயிரிழந்த பாலாக்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு கோவை விமான நிலையத்தில் ராணுவ மரியாதை செய்யப்பட்டது. 

Share this Video

சிக்கிம் விபத்தில் உயிரிழந்த பாலாக்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு கோவை விமான நிலையத்தில் ராணுவ மரியாதை செய்யப்பட்டது. சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கடந்த 23 ஆம் தேதி பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: நாளை (டிச.26 ) சுனாமி நினைவு தினம்... 18 ஆண்டுகள் கடந்தும் நீங்கா சோகம்!!

இதில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து உயிரிழந்தவர்களின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க: சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ய அறிவுறுத்தல்!!

இதை அடுத்து அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Related Video