சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ய அறிவுறுத்தல்!!
சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பிற நாடுகளிலும் கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1.5 டன் தக்காளிகள்.. சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம் - வைரல் வீடியோ!
இந்த நிலையில் சீனாவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சீனாவிலிருந்து கடந்த டிச.23 ஆம் தேதி டெல்லி வழியாக ஆக்ராவுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது !! எந்த நாடு தெரியுமா?
மேலும் அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுக்குறித்து அம்மாநில தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கை சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டும். கொரோனா தொற்றை தவிர்க்க கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.