Asianet News TamilAsianet News Tamil

கிறிஸ் கெய்ல் விக்கெட் சர்ச்சை.. மௌனம் கலைத்த மிட்செல் ஸ்டார்க் வீடியோ

கிறிஸ் கெய்ல் விக்கெட் சர்ச்சை.. மௌனம் கலைத்த மிட்செல் ஸ்டார்க்

First Published Jun 7, 2019, 4:53 PM IST | Last Updated Jun 7, 2019, 4:53 PM IST

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் 21 ரன்களில் ஸ்டார்க் வீழ்த்தினார். 

கெய்லின் விக்கெட்டை வீழ்த்தியதற்கு முந்தைய பந்து நோ பால். ஆனால் அம்பயர் அதை கவனிக்க தவறியதால் நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அதற்கு நோ பால் கொடுத்திருந்தால், விக்கெட் ஆன பந்து ஃப்ரீ ஹிட்டாகியிருக்கும். இதுகுறித்து போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எனக்கே அது நோ பால் என்பது சற்று முன்னர் தான் தெரியும் என்றார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான கெய்லை நல்லவேளையாக விரைவில் வீழ்த்தியாச்சு என்றும் கூறினார். 
 

Video Top Stories