திமுக எம்.பி. 38 பேரு என்ன செய்கிறார்கள்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!!

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க தெம்பு திராணியில்லை என திமுகவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். 

Share this Video

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க தெம்பு திராணியில்லை என திமுகவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில், பொன் விளையும் பூமியை பாதுகாத்தது அதிமுக தான். நாங்கள் கொண்டு வந்து அமல்படுத்திய திட்டத்தை, சட்டத்தை பாதுகாத்தாலே போதும். சட்டசபையில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசணும். அங்கே தான் குரல் கொடுக்கணும். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க துப்பில்லை; தெம்பு திராணியில்லை. திமுக எம்.பி.க்கள் 38 பேர் என்ன பண்றாங்க? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு முழுமூச்சோடு செயல்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

Related Video