புதுச்சேரியில் பட்டப்பகலின் பைக் திருட்டு... சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

புதுச்சேரி அண்ணாசாலையில் மதுபானகடை முன்பு நிறுத்தபட்டு இருந்த பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் அதுக்குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Share this Video

புதுச்சேரி அண்ணாசாலையில் மதுபானகடை முன்பு நிறுத்தபட்டு இருந்த பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் அதுக்குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அண்ணாசாலையில் தனியார் மதுபானகடை ஒன்று இயங்கி வருகிறது. அதன் எதிரே பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்லுவது வழக்கம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: 6 மாத காலத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, நகரும் படிக்கட்டு அமைக்கப்படும்: செங்கோட்டையன்!

அந்த வகையில் அங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் அங்கிருந்த பைக் ஒன்றை திருடி சென்றனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பைக் திருட்டு நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: வாகரையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி!

அப்போது அதில் இரண்டு பேர் பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதை அடுத்து சிசிடிவி காட்சி உதவியுடன் பைக்கை திருடிச்சென்றவர்களை கண்டுப்பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பைக்கை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video