வாகரையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி!

பழனி அருகே  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  மாரத்தான் எனப்படும் தொடர் ஓட்டம் போட்டி நடைபெற்றது. பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

Marathon competition held in Vagarai near Palani ahead of Pongal Festival

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வாகரை. இங்கு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு  மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை, ஈரோடு, தேனி, மதுரை, பொள்ளாச்சி, ஊட்டி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு பத்து கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் கொண்டாட்டம்!

மாரத்தான் போட்டியை கீரனூர் காவல்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி ராசு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.  மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா, இரண்டாவது பரிசை மணப்பாறையை சேர்ந்த யாழினி,  மூன்றாவது பரிசை பொள்ளாச்சியை சேர்ந்த சங்கமித்ரா ஆகியோர் வென்றனர்.

இதையும் படியுங்கள்: தமிழக அரசின் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு

ஆண்கள் பிரிவில் கோவையைச் சேர்ந்த ஜெபக்குமார் என்பவர் முதல் பரிசையும், ஊட்டியை சேர்ந்த ரங்கராஜ் இரண்டாவது பரிசையும், அரியலூரை சேர்ந்த ரித்தீஷ் என்பவர் மூன்றாவது பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.

Pongal: பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்: 3 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios