Asianet News TamilAsianet News Tamil

Watch : 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த உதயநிதி… மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஏற்பாடு!!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் சின்னியம்பாளையத்தில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதையும் படிங்க: பயந்து போறேனா? ஹோலி கொண்டாட போறேன் சாப்; சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்

மேலும் இதில் திருமணம் செய்துக்கொண்ட ஒவ்வொரு தம்பதிகளுக்கும் தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி,  கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட  ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயற்திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்புரையாற்றினார்.

இதையும் படிங்க: 6 மணி நேரத்தில்.. 350க்கும் மேற்பட்ட கிரேவி செய்து 'உலக சாதனை' படைத்த கோவை இளைஞர் !!

வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலை வகித்தார். மேலும் இளைஞரணி மாநில துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்பி நாகராஜ்,  எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், கோவை செல்வராஜ், மற்றும் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Video Top Stories