கான்ஸார் செவக்கனும்... ஒன்னு நெருப்பால இல்ல ரத்தத்தால! இரண்டாம் பாகத்தின் லீடுடன் வெளியான 'சலார்' ட்ரைலர்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக்கி உள்ள 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

First Published Dec 18, 2023, 4:13 PM IST | Last Updated Dec 18, 2023, 4:14 PM IST

கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தையும், கன்னட திரை உலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.  1200 கோடி வசூல் செய்த இந்த படத்தை தொடர்ந்து, தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து பிரஷாந்த் நீல் இயக்கி உள்ள திரைப்படம் 'சலார்'.

இரண்டு உயிர் நண்பர்கள் கான்சார் என்கிற ஊரால் எப்படி பரம விரோதிகளாக மாறுகிறார்கள் என்பதை இரண்டு பாகங்களாக இப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். முதல் பாகத்தில் இந்த இரண்டு நண்பர்களின் சிறு வயது முதல், எப்படி விரோதிகளாக மாறுகிறார்கள் என்பது வரையிலான காட்சிகள் இடம்பெறுகிறது. இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க இந்த நண்பர்களின் விரோதம் குறித்த காட்சிகள் இடம்பெறும் என்பதை ட்ரைலரிலேயே லீடு கொடுத்து தெரிவித்துள்ளார் இயக்குனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில், பிரபாஸுக்கு நண்பராக பிருத்திவிராஜ் நடித்துள்ளார். ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் டினோ ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம், போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை கே ஜி எஃப் இரண்டு பாகங்களை இயக்கிய ஹம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

பிரமிக்க வைக்கும் காட்சிகளுடனும்... ஆச்சர்யப்படவைக்கும் VFX தொழில்நுட்பத்துடனும் உருவாகியுள்ள 'சாலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி, கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.


 

Video Top Stories