Asianet News TamilAsianet News Tamil

Python : சேலம் ஊத்துமலையில் வீட்டிற்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு! லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

சேலம் ஊத்துமலை அடிவாரத்தில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது. லாவகமாக படித்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை சேர்வராயன் வனப்பகுதியில் விடப்பட்டது.
 

சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை அடிவாரத்தில் உள்ள திடீர் நகரில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு (Python) ஒன்று புகுந்தது. இது குறித்து ராஜேந்திரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டினுள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த பாம்பை அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஊத்துமலை அடிவாரத்தில் குடியிருப்புகள் நிறைந்து காணப்படும் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு வீட்டினுள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories