Asianet News TamilAsianet News Tamil

சித்திரை வளர்பிறையை முன்னிட்டு நல்லேர் பூட்டி வழிபாடு செய்த விவசாயிகள்

ஜெயங்கொண்டம் அருகே பூவந்திகொல்லை கிராமத்தில் சித்திரை மாதம் வளர்பிறையை முன்னிட்டு நல்லேர் கட்டி வழிபாடு செய்த கிராம மக்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவந்திகொல்லை, நடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையை முன்னிட்டு பஞ்சாங்க முறைப்படி திசைகள் குறிக்கப்பட்டு நல்லேர் பூட்டி வழிபாடு செய்தனர்.

முன்பு உள்ள காலகட்டங்களில் வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அவைகளை குளிப்பாட்டி மஞ்சள் சந்தனம் குங்குமம் பூசி மாலை அணிவித்து நிலங்களில்  நிறுத்தி வழிபாடு செய்து விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும். மழை மாரி பொழிய வேண்டும் என வேண்டுதல்கள் வைத்து வழிபாடு செய்து நல்லேர் பூட்டுவது வழக்கம்.

தற்பொழுது ஏர் உழும் காளைகள் வளர்ப்பு குறைந்த காரணத்தினால் டிராக்டரை நிறுத்தி வழிபாடு செய்து. பின்னர் நிலங்களை உழுது வணங்கி வழிபாடு செய்தனர்.

Video Top Stories