Watch : ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்! தாயும் சேயும் நலம்!

ஜெயங்கொண்டம் அருகே நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண்குழந்தையை ஈன்றெடுத்தார்.
 

First Published Apr 7, 2023, 3:25 PM IST | Last Updated Apr 7, 2023, 3:25 PM IST

அரியலூர் மாவட்டம் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு. இவர் நிறைமாத கர்ப்பிணி ஆவார்.இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்தது. இதனால் சாலையில் ஓரமாக ஆம்புலன்ஸ் நிறுத்திய மருத்துவ நிபுணர் செல்வகுமார், பைலட் குமரவேல் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய் சேய் இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் சேர்ந்தனர் இருவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Video Top Stories