விவசாயிகளை அச்சுறுத்திய 12 அடி நீள மலைப்பாம்பு..! சீறிப்பாயும் வீடியோ..
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பெலகிரி ரங்கசாமி மலைப்பகுதி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எலந்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து விவசாய தோட்டத்தில் புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 12 அடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். கிராமத்தின் அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்ததால் அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.