Asianet News TamilAsianet News Tamil

முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது... சரிகமப டெடிகேஷன் ரவுண்டுக்கு பின் மாறிய வாழ்க்கை; மனம் திறந்த ஸ்வேதா

சரிகமப நிகழ்ச்சியில் தந்தை தன் மகளின் கடிதத்தை படித்த பின் அவரின் காலில் விழுந்த சம்பவம் வைரலான நிலையில், அதுபற்றி ஸ்வேதா பேசி இருக்கிறார்.

Zee Tamil Saregamana Senior Season 4 contestant Shwetha emotional gan
Author
First Published Jun 27, 2024, 2:10 PM IST

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோ சரிகமப சீசன் 4. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை தேர்வு செய்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெடிகேட் செய்து பாடினார். 

அதில் ஒருவராக ஸ்வேதா தனது அப்பாவிற்கு டெடிகேட் செய்வதாக சொல்லி ஆனந்த யாழை மீட்டுகிறாயே என்ற பாடலை பாடி அரங்கத்தை அசத்தினார். இவர் பாடுவதற்கு முன்பாக தனது அப்பாவுக்காக முதல் முறையான லெட்டர் ஒன்றை எழுதி இருப்பதாக சொல்லி அப்பாவை மேடைக்கு ஏற்றி படிக்க வைத்தார். எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதானு இதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. அதை நீங்க இதுவரைக்கும் சொன்னதும் இல்லை பாசத்தை காட்டியதும் இல்லை என்று பேச அவர் பிடிக்கும் ஆனால் இதுவரைக்கும் வெளியே காட்டியதில்லை என அப்படியே உடைந்து போய் கண்ணீர் விட அப்பாவுக்கு பதிலாக ஸ்வேதா அந்த லெட்டரை படிக்க தொடங்கினார். 

எனக்கு ரொம்ப நாள் ஏக்கம் இது.. எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரே ஒரு முத்தமும் அரவைணைப்பும் வேண்டும் என்று சொல்ல அவரது அப்பா யாரும் எதிர்பாராத விதமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க மொத்த மேடையும் கண்ணீர் மயமானது. அதே நேரத்தில் ஸ்வேதாவின் ஆசைகளும் நிறைவேறின, ஆமாம் அவரது அப்பா முதல் முறையாக மகளை கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்த அந்த அன்பில் அரங்கமே கரைந்து போனது. ஸ்வேதாவின் பல நாள் ஏக்கத்தை தீர்த்த இந்த தருணத்தை பற்றி அவரே மனம்விட்டு பேசி இருக்கிறார்

இதையும் படியுங்கள்... பான் இந்தியா ஹீரோக்களாக வலம் தெலுங்கு நடிகர்கள்.. அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா?

அவர் கூறியதாவது : என் அப்பா என்னையே காலில் விழ விட மாட்டார், அதெல்லாம் வேண்டாம்னு தள்ளி போயிடுவார். அப்படி இருக்கும் போது அவர் என் கால்ல விழுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, அவர் கீழே குனிந்தும் நானும் அப்படியே உட்கார்ந்துட்டேன். என்னை மீறி என் கண்கள் கலங்க தொடங்கிடுச்சு. உன்னை நான் இவ்வளவு ஏங்க வைத்திருக்கேனா.. உன் மனசை புரிஞ்சிக்காமல் போய்ட்டேனு அழுதார். இறுதியா நான் கேட்ட முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது. அது என்னால் மறக்க முடியாது. ரொம்ப சந்தோசமாக இருந்தது. 

இந்த தருணத்திற்கு அப்புறம் குடும்பத்தினர் சொன்னது பற்றி பேசிய ஸ்வேதா, பொதுவா என் அப்பா அழ மாட்டார், அவர் அவ்வளவு ஸ்டார்ங். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தேம்பி தேம்பி அழுதார், சொந்தகாரங்க நிறைய பேர் போன் பண்ணி பேசுனாங்க. இப்போ உனக்கு சந்தோசமா, உன் ஏக்கம் தீர்ந்ததா என்று கேட்டாங்க. அதே நேரம் சிலர் போன் பண்ணி ஏன் டி அவனை அப்படி அழ வச்ச, அவன் அழுது நாங்க எல்லாம் பார்த்ததே இல்லனு செல்லமா திட்டினாங்க. ப்ரண்ட்ஸ் சிலர் எல்லாம் பாடி தான் பாப்புலர் ஆவாங்க, ஆனால் நீ எல்லாரையும் அழ வச்சே பாபுலாராகிட்ட என்று கலாய்க்கவும் செய்தாங்க என்று சொல்கிறார். 

இந்த டெடிகேஷன் ரவுண்டுக்கு பிறகு அப்பா மகள் பாண்டிங் குறித்து அவர் கூறுகையில், இத்தனை வருஷமா பார்த்த அதே அப்பா தான், ஆனால் இப்போ பார்க்கும் போது இன்னும் புதுசா தெரியுறாரு. இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு என்று மகிழ்ச்சி பொங்க பேசினார். இந்த ரவுண்டுக்கு பின் அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார், அதே நேரம் ரொம்ப அழுத்துட்டனானு கேட்டார். யார் உனக்கு இந்த ஐடியா கொடுத்ததுனு கேட்டார் என தெரிவித்தார்.

இந்த ஐடியா யார் கொடுத்தது என்கிற கேள்விக்கு பதிலளித்த ஸ்வேதா, அப்பா வெளிநாடு போய் இருக்கும் போது அம்மா கூட நிறைய லெட்டர்ல தான் பேசுவாரு. அம்மா அனுப்புற லெட்டரை படிக்கவும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் மனசுல இருக்கிற விஷயத்தை சொல்ல லெட்டரை பயன்படுத்தினேன் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்... முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே சீரியல்; டாப் 10க்குள் நுழைந்த கார்த்திகை தீபம்- இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்ட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios