- Home
- Gallery
- முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே சீரியல்; டாப் 10க்குள் நுழைந்த கார்த்திகை தீபம்- இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்ட்
முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே சீரியல்; டாப் 10க்குள் நுழைந்த கார்த்திகை தீபம்- இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்ட்
டாப் 10ல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த வாரம் அதற்கு போட்டியாக ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் எண்ட்ரி கொடுத்துள்ளது.

top 10 serials
சின்னத்திரை சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை உடன் உள்ளதால் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சீரியல்களின் முன்னணி நிலவரம் டிஆர்பி டேட்டிங்கை வைத்து கணிக்கின்றனர். அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 25-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக ஜீ தமிழ் சீரியல் களமிறங்கி உள்ளது.
serial TRP Rating
டாப் 10 டிஆர்பி பட்டியலில் கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த ஆஹா கல்யாணம் சீரியலை சன் டிவியின் ராமாயணம் சீரியல் பின்னுக்கு தள்ளி உள்ளது. ராமாயணம் சீரியலுக்கு 5.05 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் இதுவரை டாப் 10ல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதற்கு போட்டியாக எண்ட்ரி கொடுத்துள்ள ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 5.30 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.14 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... 'இந்தியன் 2' படத்தில் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கிய கமல் முதல் பாகத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
Top 10 Tamil serial TRP Rating
கடந்த வாரம் 9-ம் இடம்பிடித்த சுந்தரி 2 சீரியல் இந்த வாரம் 6.62 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதே புள்ளிகளை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலும் பெற்றும் 7ம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த மல்லி சீரியல், இந்த வாரம் 6.88 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.71 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
Top 10 Tamil Serials
முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருமகள் சீரியல் 7.85 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 2ம் இடத்தில் இருந்தது. அடுத்ததாக மூன்றாவது இடம் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியலுக்கு 7.89 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. வழக்கமாக முதல் இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் 8.74 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 2ம் இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் 8.80 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து மாஸ் காட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... Sivakarthikeyan : இந்தியன் 2வில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய சிவகார்த்திகேயன் - அதுவும் இந்த கேரக்டரிலா?