பான் இந்தியா ஹீரோக்களாக வலம் தெலுங்கு நடிகர்கள்.. அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா?
அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Telugu Top Stars
டோலிவுட் என்று பிரபலமாக அறியப்படும் தெலுங்குத் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பாகுபலி படங்களுக்கு பின் இந்த வளர்ச்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். அதன் பின் RRR, புஷ்பா என பல படங்கள் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தெலுங்கின் உச்ச நடிகர்களும் தங்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Prabhas
பிரபாஸ்
பான் இந்தியா ஹீரோவாக கருதப்படும் பிரபாஸ் இந்திய திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர். பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்கி 2898 ஏடி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்பிரிட், தி ராஜா சாப், சலார் 2 ஆகிய படங்கலை அவர் கைவசம் வைத்திருக்கிறார். இவை அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாகும். பிரபாஸ் ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கல்கி படத்திற்கு அவர் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் படத்தில் நடிக்க அவர் ரூ.150 கோடி வாங்க உள்ளாராம். இதன் மூலம் பிரபாஸ் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார்..
Mahesh Babu
மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக SSMB 29 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1000 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த பிரம்மாண்ட படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்திற்காக மகேஷ் பாபு ரூ. 125 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Allu Arjun
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் சென்சேஷனாக மாறியுள்ளார். புஷ்பா 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளார். அதன்படி புஷ்பா 2 படத்திற்கா அவர் ரூ.150 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
Junior Ntr
ஜூனியர் என்டிஆர்:
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் கொரட்டாலா சிவாவின் பிரம்மாண்டமான தேவாரா: பாகம் 1 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தேவாரா 1 படத்திற்கு அவர் ரூ.60 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தேவாரா உருவாகி வருகிறது. மேலும் ஹ்ருத்திக் ரோஷனின் வார் 2 படத்திலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார். அவர் இந்த படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவை தவிர பிரசாந்த் நீல் இயக்க உள்ள ஒரு படத்திலும், தேவாரா 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
Ram Charan
ராம் சரண்:
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி படம் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தற்போது ராம் சரண் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் 170 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிறது. கேம் சேஞ்சருக்கு சம்பளம் வாங்காமல் லாபத்தில் இருந்து பங்கை எடுக்க ராம் சரண் விரும்புகிறார். படத்தின் வியாபாரம் ரூ.350 கோடிக்கு மேல் போக வாய்ப்புள்ளதால், இந்த ராம் சரணுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் வருமான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pawan Kalyan
பவன் கல்யாண்:
தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் முன்னணி நடிகர்களில் ஒருவர். பவன் கல்யாண் ‘OG,’ படத்தில் நடித்ததற்காக ரூ.100 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.