Asianet News TamilAsianet News Tamil

மலிவு விலையில் புது எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார் - வெளியான ஸ்பை படங்கள்..!

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் வாகன ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளன. 

Testing begins for new MG small EV in India
Author
India, First Published Jun 30, 2022, 7:40 PM IST

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கி இருக்கிறது. ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ZS EV மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மற்றொரு எலெக்ட்ரிக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதன் படி இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகளை எம்ஜி மோட்டார் துவங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ. 72 லட்சம் விலையில் பி.எம்.டபிள்யூ. ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

இரண்டு கதவுகள்:

இதனை உறுதிப் படுத்தும் வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் வாகன ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை ஆகும். எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனம் இரண்டு கதவுகள் கொண்ட சிறிய கார் மாடல் ஆகும். இதன் அளவு மற்றும் இதர விவரங்களை வைத்து பார்க்கும் போது இந்த மாடல் அர்பன் மொபிலிட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிமுகம் செய்யப்படலாம். 

இதையும் படியுங்கள்: மிக குறைந்த விலையில் புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Testing begins for new MG small EV in India

டெயில் கேட் டிசைன்:

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்பட்டு வரும் எம்ஜி எலெக்ட்ரிக் காரின் கதவுகளில் ORVM-கள், செங்குத்தாக பொருத்தப்பட்ட கதவு கைப்பிடிகள், ரியர் பம்ப்பரின் மீது நம்பர் பிளேட், டெயில் கேட் மீது ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் கார் ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் டெயில் லைட்கள் உள்ளன. 

இதையும் படியுங்கள்: இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

விலை விவரம்:

எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் பேட்டரி அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், கடந்த மாதம்  தனியார் நிறுவனத்திற்கு அளித்த தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் வாகனம் எம்ஜி ZS EV மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என்று தான் எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில், இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சம் துவக்க விலை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. தோற்றத்தின் படி இந்த மாடல் எம்ஜி நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வரும் வுலிங் ஏர் EV போன்றே காட்சி அளிக்கிறது. அந்த வகையில், இந்த கார் வுலிங் ஏர் EV மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவன பேட்டரி வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios