ரூ. 72 லட்சம் விலையில் பி.எம்.டபிள்யூ. ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

வழக்கமான பி.எம்.டபிள்யூ. லோகோவுக்கு மாற்றாக காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

BMW 6 Series 50 Jahre M Edition launched at rs 72.90 lakhs in India

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 6 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது அதிக திறன் கொண்ட M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் எடிஷன் ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது இரண்டாவது மாடலாக பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஜாரெ எம் எடிஷ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: மிக குறைந்த விலையில் புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்பெஷல் எடிஷன் 50 ஜாரெ  மாடலில், பி.எம்.டபிள்யூ. பாரம்பரிய மோட்டார்ஸ்போர்ட் லோகோவை தழுவிய M சின்னம் இடம்பெற்று இருக்கிறது. இது வழக்கமான பி.எம்.டபிள்யூ. லோகோவுக்கு மாற்றாக காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் டான்சனைட் புளூ மெட்டாலிக், M கார்பன் பிளாக், பெர்னினா கிரே ஆம்பர் எபெக்ட் மற்றும் மினரல் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

இவை தவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் கூடுதலாக M அக்சஸரீக்களை தேர்வு செய்து கொள்ளலாம். இல்லை எனில் M அக்சஸரீ பேக்கேஜ்களையும் பொருத்திக் கொள்ளலாம். இதன் மோட்டார்ஸ்போர்ட் பேக்கேஜ் அசத்தலான எக்ஸ்டீரியர் அப்கிரேடு வழங்குகிறது. இதில் ஹை கிளாஸ் பிளாக் நிறத்தால் ஆன பி.எம்.டபிள்யூ. கிட்னி கிரில், கார்பன் ஃபைபரால் ஆன கீ ஃபோப், அல்காண்ட்ரா மற்றும் 19 இன்ச் 647 M லைட் அலாய் வீல்கள் ஜெட் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: இப்படியே போனால் விற்பனையை தான் நிறுத்தனும்... மாருதி சுசுகி அதிர்ச்சி தகவல்..!

BMW 6 Series 50 Jahre M Edition launched at rs 72.90 lakhs in India

இண்டீரியர்:

பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் நேச்சுரல் லெதர் டகோட்டா மற்றும் M சீட் பெல்ட்கள் உள்ளன. சீட்களில் முழு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் இதன் ஓட்டுனர் இருக்கை மற்றும் பயணிகள் இருக்கைகளில் மெமரி அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் பின்புறம் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேக்ரெஸ்ட் ஆங்கில் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரோலர் சன் பிளைண்ட்கள் உள்ளன.

என்ஜின் விவரங்கள்:

புதிய 6 சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டி விடும். 

இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஜாரெ 50 M எடிஷன் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மற்றும் ஆடி A6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios