Asianet News TamilAsianet News Tamil

மிக குறைந்த விலையில் புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா அறிமுகம் - எவ்வளவு தெரியுமா?

2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.  வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

2022 maruti suzuki brezza launched india price variants 
Author
India, First Published Jun 30, 2022, 2:59 PM IST

மாருதி சுசுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பிரெஸ்ஸா மாடல் மாருதி சுசுகி அரினா மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.  வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. 

இதையும் படியுங்கள்: இப்படியே போனால் விற்பனையை தான் நிறுத்தனும்... மாருதி சுசுகி அதிர்ச்சி தகவல்..!

புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் சந்தா முறை திட்டத்திலும் வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 18 ஆயிரத்து 300 ஆகும். இதில் வாகன பதிவு, பராமரிப்பு மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவ சேவைகளுக்கான கட்டணமும் அடங்கும். 

இதையும் படியுங்கள்: இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய சந்தையில் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் K15C என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் முன்னதாக மேம்பட்ட எர்டிகா மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

2022 maruti suzuki brezza launched india price variants 

இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
 
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா சி.என்.ஜி. மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் லிட்டருக்கு 20.15 கி.மீ. மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 19.80 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது. புதிய பிரெஸ்ஸா மாடல் குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் நீளம், அகலம் மற்றும் வீல்பேஸ் முறையே - 3,995mm, 1,790mm மற்றும்  2,500mm அளவீடுகளை கொண்டு இருக்கிறது.  

2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் உள்புறத்தில் புதிய டூயல் டோன் பிளாக் மற்றும் பிரவுன் டேஷ்போர்டு டிசைன் உள்ளது. இது பலேனோ மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது. இத்துடன் ஸ்விட்ச் கியர், ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

டாப் எண்ட் மாடல்களில் புதிதாக 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆச்சோ, ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி, அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் ஏ.சி. வெண்ட்கள், வாய்ஸ் கமாண்ட், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், யு.எஸ்.பி. டைப் சி ரியர் சார்ஜிங் போர்ட்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், அலெக்சா வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios