விக்கிபீடியா பயனர்களிடம் நன்கொடை சேகரித்து வரும் நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட பல பெருநிறுவனங்களின் உரிமையாளரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் ட்விட்டரையும் வாங்கியதை அடுத்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய பின் அதற்கு எக்ஸ் என்று புதிய பெயர் வைத்தார்.
தொடர்ந்து ட்விட்டரில் தனது கருத்துகளைப் பதிவிடும் அவர் அடிக்கடி அதிரடி கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துகிறார். இந்நிலையில், இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவைப் பற்றி சமீபத்தில் அவர் கூறியிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது. விக்கிப்பீடியா தனது பெயரை மாற்றிக்கொண்டால் 1 பில்லியன் டாலர் நன்கொடை கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.
சந்தியரான்-3 லேண்டர், ரோவர் வெடித்து சிதறப் போகிறதா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
"அவர்கள் தங்கள் பெயரை 'டிக்கிபீடியா' என்று மாற்றிக்கொண்டால் நான் அவர்களுக்கு ஒரு பில்லியன் டாலர் வழங்குவேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். விக்கிபீடியா பயனர்களிடம் நன்கொடை சேகரித்து வரும் நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார். தன்னைப் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இந்த விமர்சனத்தையும் சேர்க்கலாம் என்றும் எலான் மஸ்க் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் விக்கிபீடியா விற்பனைக்கு அல்ல என்று அந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் செய்தியை பகிர்ந்து, விக்கிபீடியா நிதி திரட்டுவது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். "விக்கிமீடியா அறக்கட்டளைக்கு ஏன் இவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விக்கிபீடியாவை இயக்க இது நிச்சயமாக தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் விக்கிபீடியா கட்டுரைகள் முழுவதையும் உங்கள் மொபைல் போனிலேயே சேமித்து வைக்க முடியும் என்றும் அப்படியானால் பணம் எதற்கு என்று சிந்திக்கும் மனங்கள் அறிய விரும்புகின்றன என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கு பலரும் பதில் அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், "விக்கிப்பீடியாவை பெயர் மாற்ற வேண்டும் என்றால் நீங்களே அதை வாங்கிவிடுங்கள். பிறகு எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்" என்று கூறியுள்ளார். அதற்கு எலான் மஸ்க், "நான் ஒரு முட்டாள் அல்ல" என்று பதிலளித்துள்ளார்.
முன் அனுபவம் தேவையில்ல... 40,000 புதியவர்களுக்கு வேலை கொடுக்க நாங்க ரெடி! டிசிஎஸ் அறிவிப்பு
