சந்தியரான்-3 லேண்டர், ரோவர் வெடித்து சிதறப் போகிறதா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
நிலவில் சிறிய விண்கற்கள் விழும்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சேதம் அடையவோ வெடித்துச் சிதறவோ வாய்ப்பு உள்ளது .
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி தடம் பதித்த இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது அங்கு உறக்க நிலையில் உள்ளன. அவை வெடித்து சிதறும் வாய்ப்பு இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது. சுமார் 40 நாட்கள் பயணித்து, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்தது. தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது.
Watch: இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் TV D1 மாதிரி விண்கல சோதனை வெற்றி
தரையிறக்கத்துக்குப் பின் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் நிலவில் பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொண்டு முக்கியத் தகவல்களைச் சேகரித்துள்ளன. லேண்டரும் ரோவரும் சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், இரவுப் பொழுது தொடங்கும்போது அவை உறக்க நிலைக்குச் சென்றன. நிலவில் மீண்டும் பகல் பொழுது தொடங்கியபோது அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி கைகூடவில்லை.
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தின் அவ்வப்போது சிறிய விண்கற்கள் விழும் என்றும் அவை லேண்டர் அல்லது ரோவர் மீது விழுந்தால் அவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். லேண்டர், ரோவர் இரண்டும் நுண் விண்கல் விழுந்து வெடித்து சிதறும் அபாயமும் இருக்கிறது என்கின்றனர்.
"நிலவின் மேற்பரப்பில் விழும் நுண் விண்கற்களால் உறக்க நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் பாதிக்கப்படலாம். நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இது போன்ற பிரச்சினையை சந்தித்திருக்கிறது" என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் எதிரொலி... கூகுள், மெட்டா நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு