முன் அனுபவம் தேவையில்ல... 40,000 புதியவர்களுக்கு வேலை கொடுக்க நாங்க ரெடி! டிசிஎஸ் அறிவிப்பு

ஜூலை 2022 நிலவரப்படி, டிசிஎஸ் 5,56,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. 156 நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

TCS on track to hire 40,000 campus recruits in current fiscal, says COO N Ganapathy Subramaniam sgb

இன்ஃபோசிஸ் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ இல்லை என்று கூறியிருக்கலாம், ஆனால் சக ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நடப்பு நிதியாண்டில் 40,000 புதியவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியமர்த்தும் திட்டத்தில் உறுதியாக உள்ளது.

டிசிஎஸ் சிஓஓ என். கணபதி சுப்ரமணியம் இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். "நாங்கள் வழக்கமாக 35,000-40,000 நபர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். அந்த திட்டம் அப்படியே உள்ளது. பெரிய அளவிலான பணிநீக்கங்கள் இல்லை”என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அதே சமயத்தில் டிசிஎஸ் ஏற்கெனவே மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களை வேலையில் சேர்ப்பதை நிராகரிக்கவில்லை. ஆனால் நிறுவனத்தின் செலவு மற்றும் தேவையைப் பொறுத்துதான் பணியமர்த்தும் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சாலைகள், விமான நிலையம், ஹெலிபேட்... எல்லையில் சீனாவின் அசுர வளர்ச்சி... எச்சரிக்கும் பென்டகன் ரிப்போர்ட்

TCS on track to hire 40,000 campus recruits in current fiscal, says COO N Ganapathy Subramaniam sgb

மும்பையை தளமாகக் கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.ஓ.ஓ. சுப்ரமணியம் மேலும் கூறுகையில், "எந்த வகையான தேவைக்கும் ஒரு அளவு உள்ளது. மொத்த பணியாளர்களில் எத்தனை சதவீதம் பேர் குறிப்பிட்ட பிரிவில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்." என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 2022 நிலவரப்படி, டிசிஎஸ் 5,56,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. 156 நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதற்கிடையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை 19 ஊழியர்கள் மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் மாதம் நடந்த மதிப்பீட்டில் 19 பணியாளர்கள் பணமோசடியில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 16 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 பேர் மேலாண்மை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தை உலுக்கும் கர்பா நடன மரணங்கள்... 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios