கார் பாதுகாப்புக்கு ஜியோ புதிய கேமரா அறிமுகம்.. விலை ரொம்ப கம்மி.. எவ்வளவு?
ரிலையன்ஸ் ஜியோ, தனது புதிய வாகன டாஷ்கேமான 'JioEyeQ Dashcam'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் Full HD கேமரா, GPS, AI கண்டறிதல் மற்றும் நைட் விஷன் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

ஜியோ டாஷ்கேம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய வாகன டாஷ்கேம் ‘JioEyeQ Dashcam’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் டாஷ்கேம் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் இந்த சாதனம் வெளியிடப்பட்டுள்ளது. சாலையில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு, விபத்து நேரங்களில் ஆதாரமாக பயன்படுத்துவதற்கு இது உதவும்.
வாகன பாதுகாப்பு சாதனம்
JioEyeQ டாஷ்கேமில் 2MP Full HD கேமரா வழங்கப்பட்டுள்ளது. 140-டிகிரி அல்ட்ரா-வைட் FOV லென்ஸ் மூலம் விரிவான காட்சிகளை பதிவு செய்ய முடியும். GPS ஆதரவு இருப்பதால், வாகனத்தின் இடம் மற்றும் பயண விவரங்கள் பதிவு செய்யப்படும். AI அடிப்படையிலான பாதசாரி கண்டறிதல் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் தெளிவான பதிவு கிடைக்க Night Vision ஆதரவு இணைக்கப்பட்டுள்ளது.
ஜியோ டாஷ்கேம் விலை
மேலும், 32GB microSD கார்டு ஸ்டோர் வசதி உள்ளது. அவசர சூழ்நிலைகளில் தானாக பதிவு செய்யும் அவசர பதிவு மற்றும் மோதல் கண்டறிதல் போன்ற முக்கிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பில்ட்-இன் வைஃபை மற்றும் மைக்ரோஃபோன் வசதி இருப்பதால், பதிவுகளை எளிதில் மொபைலில் பார்க்க முடியும். இந்த சாதனத்தின் விலை ரூ.3,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் டாஷ்கேம்
முழு கட்டணமாகவும் அல்லது மூன்று மாத நோ-செலவு EMI முறையிலும் வாங்க முடியும். EMI தேர்வு செய்தால் மாதத்திற்கு ரூ.1,166 செலுத்த வேண்டும். இந்த டாஷ்கேம் JioThings ஆப்புடன் இணைந்து செயல்படும். Android மற்றும் iOS சாதனங்களில் இந்த ஆப் கிடைக்கிறது. இதே விலையில் CrossBeats, Qubo, NEXDIGITRON, Boat போன்ற பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில் JioEyeQ சந்தையில் இடம்பிடிக்கத் தயாராகியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

