ஜியோவை அடிச்சுத் தூக்கும் ஏர்டெல் பேமிலி பேக்! ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிட்டட் பலன்கள்!!
ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரே ரீசார்ஜ் மூலம் 4 தொலைபேசி இணைப்புகளில் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தலாம். அதுவும் வெறும் ரூ.1199 விலையில்.
ஏர்டெல் நிறுவனம் ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் நான்கு தொலைபேசி இணைப்புகள் பலன் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.1199 விலையில் கிடைக்கும் இந்த புதிய சலுகை குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து ஒரே ரீசார்ஜ் செய்யும் வசதியைக் கொடுக்கிறது.
தொலைத்தொடர்பு கட்டணத்தின் சிக்கனமாக இருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் ரூ.1199 திட்டம் இத்திட்டம் பல அம்சங்களை வழங்குகிறது. முதன்மை இணைப்புடன் மூன்று கூடுதல் இணைப்புகளையும் அனுமதிக்கிறது. இதன் மூலம் குடும்பங்கள் அல்லது நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து செல்போன் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.
இந்தத் திட்டத்தின் சந்தாதாரர்கள் 190ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவைப் பெறுவார்கள். முதன்மை இணைப்புக்கு 100 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒவ்வொரு கூடுதல் இணைப்புக்கும் 30 ஜிபி ஒதுக்கப்படும். இதுமட்டுமின்றி, 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் அம்சமும் உள்ளது. இதனால், ஒருபோதும் டேட்டா தீர்ந்துவிடும் என்ற கவலையே தேவையில்லை.
சந்திராயன்-3 திட்ட கண்டுபிடிப்புகள் தேசிய விண்வெளி தினத்தில் வெளியாகும்: அமைச்சர் அறிவிப்பு
மேலும் இத்திட்டத்தில் அன்லிமிட்டட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை இலவசமாப் பேசலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்.
இத்திட்டம் ஓடிடி பிரியர்களை ஈர்க்கும் வகையில், ஆறு மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் விங்க் பிரீமியம் ஆகியவற்றுக்கான சந்தாக்களும் இந்த பேக்கில் அடங்கும். இதன் மூலம் கூடுதல் செலவுகள் இல்லாமல் பல்வேறு ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம்.
மேலும், ஏர்டெல்லின் ரூ.1199 திட்டத்தில் மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதும் இல்லை. இது வெளிப்படையான ரீசார்ஜ் ஆப்ஷனாக உள்ளது. முழு குடும்பத்திற்கும் பயன்படும் சிக்கனமான திட்டமாகவும் உள்ளது.
பெண்கள் விஷயத்தில் சபலம்.. வீடியோ கால் வந்த ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சத்தை இழந்த இளைஞர்!