Asianet News TamilAsianet News Tamil

சந்திராயன்-3 திட்ட கண்டுபிடிப்புகள் தேசிய விண்வெளி தினத்தில் வெளியாகும்: அமைச்சர் அறிவிப்பு

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-3 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. 

Data and findings from Chandrayaan-3 to be revealed on National Space Day sgb
Author
First Published Aug 21, 2024, 6:23 PM IST | Last Updated Aug 21, 2024, 6:47 PM IST

ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினத்தன்று இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்திலிருந்து பெற்றப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நாள் இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வு வரைபடத்தை வெளியிடும் ஒரு சந்தர்ப்பமாகவும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் லட்சியங்களை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-3 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்து நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்த நான்காவது நாடு என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது.

பெண்கள் விஷயத்தில் சபலம்.. வீடியோ கால் வந்த ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சத்தை இழந்த இளைஞர்!

பின்னர் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் நிலவில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியை நிறைவு செய்தன. சந்திரயான்-3 மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்வது நிலவின் புவியியல் மற்றும் கனிமவளம் பற்றிய அறிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்-3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வுகளை நடத்தியது. ரோவர் அனுப்பியுள்ள தரவு நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்நிலையில், தேசிய விண்வெளி தினத்தில் சந்திரயான்-3 திட்டத்தின் தரவுகள், கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஷாப்பிங் டூ சுற்றுலா! எந்த கிரெடிட் கார்டு பெஸ்டு? நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios