பெண்கள் விஷயத்தில் சபலம்.. வீடியோ கால் வந்த ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சத்தை இழந்த இளைஞர்!
மிரட்டல் விடுத்ததால் பதற்றம் அடைந்த இளைஞர் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதோடு நிறுத்தாமல் திரும்பத் திரும்ப மிரட்டியதால் அரண்டுபோன அவர், ஐந்து முறை பணம் அனுப்பி இருக்கிறார். மொத்தம் 2.5 லட்சம் பணம் அனுப்பிய பிறகும் டார்ச்சர் தொடர்ந்தது.
மும்பையைச் சேர்ந்த 26 வயதான வங்கி ஊழியர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமில்லாத பெண்ணுடன் பழகத் தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ரூ. 2.50 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் மும்பையின் பிரபாதேவி பகுதியைச் சேர்ந்தவர். தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், அவரது இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பின் தெரியாத பெண்ணிடம் இருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது.
பெண்கள் விஷயத்தில் சபலப்பட்ட இளைஞர், நட்பு கோரிக்கையை ஏற்று அவருடன் பேசியுள்ளார். சிறிது நேரத்திலேயே இருவரும் தங்கள் வாட்ஸ்அப் எண்களைப் பகிர்ந்துகொண்டனர். நள்ளிரவு 1.15 மணியளவில், அவருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது. அதில் ஒரு பெண் நிர்வாணமாக ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த போன் நம்பர் தேவையில்ல! பாதுகாப்பைக் கூட்டும் புது அப்டேட்!
சிறிது நேரத்தில் வீடியோ கால் துண்டிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வீடியோ காலின்போது ரிக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. அதை அனுப்பிய பெண் “எனக்குப் பணம் அனுப்புங்கள் இல்லையெனில் இந்த வீடியோ உங்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பப்படும்” என்று பிளாக்மெயில் செய்துள்ளார்.
அந்தப் பெண் மிரட்டல் விடுத்ததால் பதற்றம் அடைந்த இளைஞர் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதோடு நிறுத்தாமல் திரும்பத் திரும்ப மிரட்டியதால் அரண்டுபோன அவர், ஐந்து முறை பணம் அனுப்பி இருக்கிறார். மொத்தம் 2.5 லட்சம் பணம் அனுப்பிய பிறகும் டார்ச்சர் தொடர்ந்தது.
அப்போதுதான் தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முயல்வதை உணர்ந்த அவர் காவல்துறையை அணுகி புகார் கொடுத்துள்ளார். மும்பை தானே போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஷாப்பிங் டூ சுற்றுலா! எந்த கிரெடிட் கார்டு பெஸ்டு? நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ்!