Asianet News TamilAsianet News Tamil

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 'திடீர்' திருப்பம்.. தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் மேல்முறையீடு !

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Yuvaraj filed a petition in the Madurai branch of the Chennai High Court seeking the quashing of their sentence in the Gokulraj murder case
Author
Tamilnadu, First Published Mar 18, 2022, 6:19 AM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு :

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் 2015-ம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் யுவராஜ், அருண் ஆகிய இருவருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

Yuvaraj filed a petition in the Madurai branch of the Chennai High Court seeking the quashing of their sentence in the Gokulraj murder case

மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் மேலும் குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

Yuvaraj filed a petition in the Madurai branch of the Chennai High Court seeking the quashing of their sentence in the Gokulraj murder case

நீதிமன்றத்தில் மேல்முறையீடு :

அத்துடன் யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்தால் பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகள் 10 பேரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios