தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி,
19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக I.S. இன்பதுரை, B.A., B.L., Ex. M.L.A.,கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், தனபால் . ., M.A., M.L., MBA., Ph.D., Ex. M.L.A.,செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதனையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்த அதிமுக இந்த இரண்டு பேரை அறிவித்துள்ளது.
அந்த வகையில் அதிமுக மூத்த தலைவர்களும் தங்களுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறத்தி வந்தனர். ஆனால் ஜெயலலிதா பாணியில் பெரிய அளவிலான தலைவர்களுக்கு இடம் ஒதுக்காமல் கட்சிக்காக பாடுபட்ட அடிப்படை தொண்டர்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவரான தனபால் 1977 முதல் இன்று வரை கழகத்தின் வளர்ச்சிக்காவும். தலைமைக்கு விசுவாசமாகவும் பணியாற்றி வருகிறார்.
கழக பொதுக் கூட்டங்கள் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டங்கள் நடத்தி நலதிட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அதிமுக சார்பாக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து உள்ளார். இது போன்ற கட்சி பணியையும், எம்எல்ஏவாக இருந்த போது பல திட்டங்களையும் தொகுதி மக்களுக்காக செய்துள்ளார்.
மற்றொரு ராஜ்யசபா வேட்பாளரான இன்பதுரை ராதாபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவிவகித்துள்ளார். அப்போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளார். மேலும் வழக்கறிஞரான இன்பதுரை அதிமுகவிற்காக பல்வேறு வழக்குகளில் வாதாடி வெற்றியும் பெற்றுள்ளார்.
