தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை கூட்ட உள்ளார். இந்த கூட்டத்தில் மந்தமாக செயல்பட்ட செயலாளர்களுக்கு எதிராக விஜய் கண்டிப்பு காட்டலாம் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நாளை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கான அவசர ஆலோசன கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் செங்கோட்டையன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் உயர்மட்ட பணிகள் துரிதமாக செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட அளவிலான அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, எஸ்ஐஆர் பணிகளில் மக்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல பணிகளில் சில மாவட்ட செயலாளர்கள் முறையாக செயல்படவில்லை என்ற ரிபோர்ட் விஜய்க்கு சென்றுள்ளது. இதனால் கடுமையாக அப்செட்டான விஜய் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நாளை நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.