இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 16.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்த மின்சார ரயிலில் அடுத்தடுத்து 8 பெட்டிகள் கழன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 30 நிமிடங்களுக்கு மேலாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பாதிப்பு சரிசெயப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ரயில் சேவை இயங்கியது.
மின்சார ரயில் சேவை பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸூம் நானும் ஒன்றாக இருக்கும் போது எங்கள் இருவரையும் துரோகி என்றார் டிடிவி.தினகரன். இன்று நண்பராகிவிட்டார். ஓபிஎஸ்வுடன் போய் சேர்ந்தால் தூக்கில் தொங்குவதற்கு சமம் என்றார் டிடிவி.தினகரன். இன்றைக்கு கயிறு கிடைக்கவில்லை போல என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இபிஎஸ் Vs ஓபிஎஸ்....
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் தேசிய தலைமையிடம் தனது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார்.
டிகே சிவகுமார் Vs சித்தராமையா
97 வது திமுக கவுன்சலராக இருந்து வருபவர் நிவேதா. இளம் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி,மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடந்த மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை. முன்னாள் கோவை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சேனாதிபதியின் மகள் நிவேதா. மேயருக்கான போட்டியில் இருந்த அவர் மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதி இழக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கவுன்சிலர் பதவி இழப்பு
தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில், “கடற்காற்றானது நகரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஈரப்பதமான காற்று நகரக்குள் துள்ளிக்குதித்து ஓடும். இதனால், இன்று நாள் முழுக்க அனுபவித்த வெப்பத் துயரத்திலிருந்து ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கலாம். மேற்கு மாவட்டங்களில் வெப்பம் நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
மதுவிலக்குத் துறையின் அலட்சியம் பொறுப்பின்மையும் தான் கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும் என குற்றிப்பிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் அறிக்கை...
டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம், ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல், இன்று கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு தவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை அறிக்கை...
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும், ராம் சரணின் மனைவி உபாசனா திருமணத்தின் துவக்கத்திலேயே கருமுட்டையை பாதுகாக்க முடிவு செய்ததாக கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கருமுட்டை சேமிப்பை வைத்து தான் உபாசனா 10 வருடங்களுக்கு பின் தற்போது கர்ப்பமாகி உள்ளாரா? என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருமணமாகி 10 வருடங்களுக்கு பின் கர்ப்பமானதன் சீக்ரெட்..?
வருட கணக்கில்... காதலித்து திருமணம் செய்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஜோடி திருமணமான ஒரே மாதத்தில் தற்போது விவாகரத்து நோக்கி வந்துள்ளனர். விஷ்ணுகாந்த் கொடுத்த பேட்டியை பார்த்து, கடுப்பான சம்யுக்தா... தற்போது அவரை அசிங்கப்படுத்துவது போல், லைவில் வந்து அவருடைய வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார்.
சம்யுக்தா Vs விஷ்ணுகாந்த்
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
சென்னையில் உள்ள லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உள்ள தியாகராய நகர், காரப்பாக்கம், அடையாறு உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
