வெயில் தொல்லை தாங்கலயா.. கவலைப்படாதீங்க.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசிய நிலையில் நல்ல செய்தியை கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியபோதிலும், கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெயிலின் தாக்கமும் பெரிதாக பாதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மோக்கா புயல் நேற்று கரையை கடந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கையில் தெரவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும், இன்றும் கோடை வெயில் சுட்டெரித்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில், “கடற்காற்றானது நகரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஈரப்பதமான காற்று நகரக்குள் துள்ளிக்குதித்து ஓடும். இதனால், இன்று நாள் முழுக்க அனுபவித்த வெப்பத் துயரத்திலிருந்து ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கலாம். மேற்கு மாவட்டங்களில் வெப்பம் நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..சித்தராமையா Vs சிவக்குமார்.. அடுத்த கர்நாடக முதல்வர் யார் தெரியுமா?