Kovai Sathyan: திமுக கூட்டணி நிலையற்றது, அக்கட்சிகள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 2026 தேர்தலுக்கு முன் கூட்டணி மாற்றங்கள் நிகழும் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
திமுக கூட்டணி கட்சிகள் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி மாறும் என்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கோவை சத்யன் கூறியதாவது:
"திமுக கூட்டணியே இல்லாமல் வெற்றி பெற்றதாக வரலாறே கிடையாது. ஆனால், அதிமுக தனித்து நின்று ஆட்சி அமைத்த வரலாறு கொண்ட கட்சி. தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருக்கிறார்.
திமுக போல கூட்டணி கட்சிகளுக்கு குடைச்சல் கொடுக்க மாட்டோம். அதிமுக கூட்டணிக் கட்சிகளின் அடையாளத்தைத் தொலைக்க வைக்கும் கட்சி கிடையாது. அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதிமுக என்றைக்குமே கூட்டணி கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த வருகிறது.
மொபைலுக்கு அடிமையான மாணவி; பெற்றோரின் கண்டிப்பால் எடுத்த விபரீத முடிவு!
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டை மது ஒழிப்பு மகளிர் மாநாடாக மாற்றுமாறு திமுக அழுத்தம் கொடுத்தது. மாக்சிஸ்ட் கம்யூனினிஸ் மாநில செயலாளர் திமுக அரசை விமர்சித்த அடுத்த நாளே மாற்றப்பட்டார். காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மாற்றப்பட்டு நான்கு கட்சிகள் மாறியவரை மாநில தலைவராக நியமித்துள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கும் அழுத்தம்தான் இதற்குக் காரணம்.
கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவை குறித்த பேச்சுவார்த்தைகள் திரைக்கு பின்னால் நடக்கும். தேர்தல் நெருங்கும்போது பேச்சுவார்த்தை தீவிரமடையும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி மாறும்"
இவ்வாறு கோவை சத்யன் பேசியுள்ளார்.
புது கிரெடிட் கார்டுக்கு அப்ளை செய்தவரிடம் ரூ.9 லட்சம் அபேஸ்!
