புது கிரெடிட் கார்டுக்கு அப்ளை செய்தவரிடம் ரூ.9 லட்சம் அபேஸ்!
Credit card scam: சமீபத்திய ஆன்லைன் மோசடி வழக்கில், சண்டிகரை சேர்ந்த ஒருவர் புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முயன்றபோது சுமார் ரூ.9 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

New credit card
சமீபத்திய ஆன்லைன் மோசடி வழக்கில், சண்டிகரை சேர்ந்த ஒருவர் புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முயன்றபோது சுமார் ரூ.9 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் டிசம்பர் 2024 இல் நடந்தது, இது மக்களைச் சுரண்டுவதற்காக மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் புதிய தந்திரங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த வழக்கில், மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க உதவுவதாகக் கூறி பணத்தைப் பறித்துள்ளனர்.
Credit card scams
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, சண்டிகரில் உள்ள செக்டர் 31 இல் வசிக்கும் பாதிக்கப்பட்ட டி. ராஜேஷ் குமாருக்கு டிசம்பரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி என்று கூறிக்கொண்டு அஜய் திரிபாதி என்பவர் பேசியுள்ளார். புதிய கிரெடிட் கார்டு பெற உதவி செய்வதாகக் கூறியுள்ளார். ராஜேஷ் அதனை ஒப்புக்கொண்டார்.
Credit card fruad
பின் வாட்ஸ்அப்பில் மீண்டும் அழைத்த மோசடி கும்பல் பாதிக்கப்பட்டவரிடமிருந்து அடையாள சரிபார்ப்புக்கு வங்கி விவரங்களைக் கேட்டுள்ளனர். ராஜேஷ் அதை நம்பி கேட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். தனது மனைவியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளின் விவரங்களையும் மோசடி செய்பவர்களிடம் கொடுத்துவிட்டார்.
Credit card users
அடுத்து மோசடி செய்பவர்கள் ராஜேஷுக்கு ஒரு லிங்க் அனுப்பி, அதை கிளிக் செய்து விண்ணப்ப செயல்முறையை முடிக்க அறிவுறுத்தியுள்ளனர். ராஜேஷ் இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, இரண்டு கிரெடிட் கார்டுகளிலும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதைக் கவனித்தார்.
Credit card benefits
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் ரீடெய்ல் வழியாக ரூ.8,69,400 மதிப்பில் ஆறு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கார்டிலிருந்து மேலும் ரூ.60,000 திருடப்பட்டது. ராஜேஷ் விரைவாக கார்டுகளை பிளாக் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் மோசடி செய்பவர்கள் ஏற்கனவே கணிசமான அளவு பணத்தை அபேஸ் செய்துவிட்டனர்.
Credit card holders
மோசடி செய்தவர்கள் இத்துடன் நிற்காமல், மறுநாள் பாதிக்கப்பட்டவரை மீண்டும் தொடர்புகொண்டு மேலும் பணம் பறிக்க முயன்றுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் அமேசான் கணக்கையும் ஹேக் செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட ராஜேஷ் சண்டிகர் சைபர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.