திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டைஅரசு பள்ளி ஆசிரியர் இளங்கோ மற்றும் கணேஷ் இருவரும் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பதிலாக, பள்ளி வளாகத்தில பார்க்கும் இடங்களில்  எல்லாம் தூங்குவதையும், மாணவர்களை கொண்டு மசாஜ் செய்வதும், வகுப்பறையில் சீட்டு ஆடுவதும் வேலையாக வைத்து உள்ளார்.

ஆங்கில வகுப்பை எடுக்கும் ஆசிரியரான கணேஷ் வகுப்பு எடுப்பதை விட, உறக்கம் கொள்வதில் தான் அதிக ஈடுபாட்டோடு உள்ளார். மேலும், வரலாறு ஆசிரியர் இளங்கோ அந்த பள்ளியில் படிக்கும் சக மாணவர்களை வைத்து பள்ளி அறையிலேயே தனக்கு மசாஜ் செய்ய வைத்து உள்ளார்.

மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளி நேரத்தில் மசாஜ் செய்து வருவதை இவர் வழக்கமாக கொண்டு உள்ளார். மேலும், இந்த ஆசிரியரின் மற்றொரு வேலை கந்து வட்டி விடுவது, தன் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

நாளடைவில் இந்த விவகாரம் சூடு பிடிக்கவே, பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கி பள்ளி வளாகத்தை  முற்றுகையிட்டனர். பின்னர் ஆசிரியர் இளங்கோவனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள்  புகார் தெரிவித்து போர்க்கொடி தூக்கினாலும், அவரை பணி நீக்கம் செய்யமால் இடமாற்றம் செய்து உள்ளனர்.

இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் இளங்கோவனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என  கூறி கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் அந்த ஊர்மக்கள். இது குறித்த தக்க நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஆசிரியர்களை நம்பி தான், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். ஆனால் இது போன்ற ஆசிரியர்கள் இருந்தால் எப்படி மாணவர்கள் படிப்பார்கள்..? நல்ல ஒழுக்கத்தை கற்று தரும் ஆசிரியர்களே பள்ளியில் ஒழுக்கம் இல்லாமல், யார் கேட்கப்போகிறார் என்ற திமிரோடு நடந்துக் கொண்டால், மாணவர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.