Asianet Tamil News Live: இரட்டை இலை சின்னம்; தேர்தல் அலுவலர் முடிப்வெடுப்பார்!!

Tamil News live updates today on february 02 2023

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரியும் பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தங்களை யாரும் அணுகவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

1:53 PM IST

விஜய்யுடன் துபாய்க்கு சீக்ரெட் டிரிப் போன ராஷ்மிகா... புகைப்படம் லீக் ஆனதால் ஷாக் ஆன வாரிசு நடிகை

துபாய்க்கு சீக்ரெட் டிரிப் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

1:06 PM IST

பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிய அண்ணாமலை! பஞ்ச் டயலாக்கெல்லாம் காமெடியாகிறது.! கலாய்க்கும் காயத்ரி ரகுராம்

இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமார் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:59 AM IST

சிகரெட் வரி உயர்வு பத்தாது.. இந்த நிதி போதாது.. இது புரட்சியான செயல்.. அன்புமணி ராமதாஸ்..!

வருமானவரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க

10:44 AM IST

என் கண்ணு முன்னாடியே.. மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொன்றேன்.. கணவர் கூறிய பகீர் தகவல்.!

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏட்டு உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:43 AM IST

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குகிறாரா ஜெ.தீபா? OPS-ஐ திடீரென சந்தித்தன் காரணம் என்ன? அவரே கூறிய தகவல்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அணி சார்பாக  வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்ததால் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

10:21 AM IST

2 படம் ஹிட் ஆனதும்... சம்பளத்தை மளமளவென உயர்த்திய சிம்பு..! தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்

தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் சிம்பு தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

10:05 AM IST

பொதுச்செயலாளராக இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? செக் வைக்கும் ஓபிஎஸ்..! உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

9:22 AM IST

தளபதி 67-ல் நடிக்கும் இந்தக் குழந்தை பிரபல நடிகரின் மகளா..! சர்ப்ரைஸ் தகவலை சந்தோஷமாக வெளியிட்ட தந்தை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்க பிரபல நடிகரின் மகள் ஒருவரும் கமிட் ஆகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

8:24 AM IST

வாத்தி பட இயக்குனர் திருமணம்... கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோ

வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் நடிகர் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் படிக்க

8:06 AM IST

பயண நேரத்தை குறைக்க தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிப்பு

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இனி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சமீபத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை கூடூர், சென்னை ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கிலோ மீட்டர் வேகம் அவரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

7:37 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. இதோ பெரிய லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

7:37 AM IST

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கிறது? ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன டிடிவி. தினகரன்..!

மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வேலையிழப்புகள் இந்தியாவை பாதிக்காதபடி எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

மேலும் படிக்க

1:53 PM IST:

துபாய்க்கு சீக்ரெட் டிரிப் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

1:06 PM IST:

இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி என பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமார் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:59 AM IST:

வருமானவரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க

10:44 AM IST:

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏட்டு உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:43 AM IST:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அணி சார்பாக  வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்ததால் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

10:21 AM IST:

தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் சிம்பு தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

10:05 AM IST:

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

9:22 AM IST:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்க பிரபல நடிகரின் மகள் ஒருவரும் கமிட் ஆகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

8:24 AM IST:

வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் நடிகர் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் படிக்க

8:06 AM IST:

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இனி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சமீபத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை கூடூர், சென்னை ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கிலோ மீட்டர் வேகம் அவரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

7:37 AM IST: