Asianet News TamilAsianet News Tamil

பொதுச்செயலாளராக இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? செக் வைக்கும் ஓபிஎஸ்..! உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

OPS requests the Supreme Court to dismiss the petition seeking recognition of EPS as General Secretary
Author
First Published Feb 2, 2023, 10:02 AM IST

அதிமுக தலைமை யார்.?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கியதற்கு  எதிராகவும், பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்து தீர்ப்பானது கடந்த 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தரப்பு வேட்பாளரை அங்கீகரித்து இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு தான் அனுப்பும் வேட்பாளரை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குகிறாரா ஜெ.தீபா? OPS-ஐ திடீரென சந்தித்தன் காரணம் என்ன? அவரே கூறிய தகவல்.!

OPS requests the Supreme Court to dismiss the petition seeking recognition of EPS as General Secretary

உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு

உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார். அதில், 11-07-2022ல் அ.தி.மு.க பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதிமுறைகளை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்  ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளரை அங்கீகரித்து போடும் கையொப்பத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழங்கிய கடிதத்தை ஏற்க உத்தரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதிகள், 

OPS requests the Supreme Court to dismiss the petition seeking recognition of EPS as General Secretary

இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பிடம் வழங்க வேண்டும் என்றும், அந்த மனு மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் தேர்தல  ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் மனு பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக சரிவு; அதிமுக.? ஈரோடு இடைத்தேர்தல் முடிவை மட்டும் பாருங்க - அண்ணாமலை போடும் புது கணக்கு !!

OPS requests the Supreme Court to dismiss the petition seeking recognition of EPS as General Secretary

எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்

மேலும் தேர்தல் ஆணையத்தையும்  இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். பொதுக்குழு வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே நாளில் 3 கூட்டணியை மாற்றிய அதிமுக..! பதற்றத்தில் இருக்கிறாரா இபிஎஸ்.?

Follow Us:
Download App:
  • android
  • ios