திமுக சரிவு; அதிமுக.? ஈரோடு இடைத்தேர்தல் முடிவை மட்டும் பாருங்க - அண்ணாமலை போடும் புது கணக்கு !!
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும். - அண்ணாமலை பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு நேற்று கொடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு ஒரு அளவுகோலாக இருக்கும்.
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, 25 ஆண்டுகளுக்கான அமிர்தகால பட்ஜெட்டுக்கு இது ஒரு அச்சாணியாக இருக்கும். அதில் உள் கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. பட்ஜெட் தாக்கல் முடியும் போது தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்பது தெரியவரும். எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருக்கும்.
இதையும் படிங்க..தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?
கணக்கெடுப்பில் இந்த ஆண்டு வளர்ச்சி 6. 8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் வகையிலான இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. நகர்ப்புற வேலைவாய்ப்பு நிலவரத்தில், கணக்கெடுப்பின்படி கொரோனா கால கட்டத்தில் இருந்து முழுமையாக நாடு மீண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளதை காட்டுகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளரை நியமிப்பது போன்றவை தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சற்று பொருமையாக இருங்கள். திமுக கூட்டணியை பொறுத்தவரை எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற பேச்சுக்கள் தான் அடிபடுகிறது அந்த கூட்டணி வேட்பாளர் இ.வி.கே.எஸ் தரப்பில் மக்களுக்கு என்ன செய்வோம், என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் பண பலத்தையும் அதிகார அரசியல் இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்துகின்றனர். அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். நாட்டை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியில் பல கட்சிகள் இணைந்து இருக்கின்றன. தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் மாநில அளவிலான அந்தஸ்தை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறோம்.
இதையும் படிங்க..Bank holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? இதோ !!
தமிழகத்தில் சிலை கலாச்சாரம் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது. போட்டி போட்டு சிலை வைக்கின்றனர். 13 மீன் பிடி கிராமங்கள் உள்ள பகுதியில் மக்கள் பணத்தை செலவு செய்து, பெரிய பேனா வைப்பதில் திமுக. வினர் அவசரம் காட்ட வேண்டுமா? பேனா சிலை வைக்கும் விவகாரத்தில், அது தொடர்பான ஆலோசனையின் போது பாஜகட்சி சார்பில் பங்கேற்ற மீனவர் அணியை சேர்ந்த முனுசாமி யைப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. பொது இடத்தில் சிலை வைக்கும் போது, மக்கள் கருத்தை மதிக்க வேண்டும்.
சமூக சேவை மற்றும் இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அங்கே சிலை வைக்க வேண்டாம் என்று தான் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். சிலை வைக்கும் விவகாரத்தில் மீனவர்களுக்குத் தான் ஆதரவு. மக்கள் கருத்தை ஏற்காமல் திமுக, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்தால் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். ஒரு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வேறு எந்த மாநிலத்திலும் எந்த முதவர் வரும் இல்லாதவாறு, ஆறு மாதங்களில் பதினாறு சதவீதம் இமேஜ் சரிவு ஏற்பட்டது தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலினுக்கு தான்.
அதனால், அலர்ஜியாகி ஓடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், பொது இடத்தில் அமைச்சர்களின் செயல்பாடுதான். அவர்கள் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவில்லை. ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும் என்றார்.
இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!