வாத்தி பட இயக்குனர் திருமணம்... கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோ
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ராங் டே படக்குழுவினருடன் வந்து கலந்துகொண்டார்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இப்படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கிறார் தனுஷ். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழில் வாத்தி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் சார் என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
வாத்தி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற பிப்ரவரி 17-ந் தேதி வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 4-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... நம்ம வாத்தி வரார்...: வாத்தி இசை வெளியீட்டு விழா எப்போது? வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
இந்நிலையில், வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் நடிகர் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், வெங்கி அட்லூரி இயக்கத்தில் ராங் டே என்கிற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் நாயகன் நிதின் உடன் வந்து வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மங்களகரமாக மஞ்சள் நிற புடவையில், தலையில் பூ வைத்து வந்த த்ரிஷா: பிரமாண்டமாக நடந்த தளபதி67 பூஜை!