நம்ம வாத்தி வரார்...: வாத்தி இசை வெளியீட்டு விழா எப்போது? வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 4 ஆம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

தனுஷ் நடித்த நானே வருவேன் படம் தோல்வி படமாக அமைந்த நிலையில், தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வாத்தி. இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
மேலும், சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய்குமார், தோட்டாபல்லி மது, ஹைபர் ஆதி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, ப்ரவீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக தனுஷின் அசுரன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களகரமாக மஞ்சள் நிற புடவையில், தலையில் பூ வைத்து வந்த த்ரிஷா: பிரமாண்டமாக நடந்த தளபதி67 பூஜை!
இப்படம் முதலில் டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 4 ஆம் தேதி வாத்தி இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அதுவும் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடக்க இருப்பதாக வீடியோ வெளியிட்டு சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அடேங்கப்பா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?
தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி, அஜித் நடிக்கும் AK62, ஆர்யன், சந்திரமுகி 2, இறைவன், இருகப்பற்று, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், லைகா புரோடக்ஷன்ஸ் நம்பர் 18, லைகா புரோடக்ஷன்ஸ் நம்பர் 20, லைகா புரோடக்ஷன்ஸ் நம்பர் 24, ரிவால்வர் ரீட்டா, தலைக்கூதல் என்று ஏராளமான படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்ராசக்க... 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கில்லி ஜோடி..! தளபதி 67-ல் திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா?