தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு! மு.க.ஸ்டாலின்
Tamil News live : கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு! மு.க.ஸ்டாலின்

இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதைப் பற்றி எனக்கு கவலை இல்லையென தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்மானம் இனம் மானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் திமுக அரசை விமர்சிப்பதாகவம் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள்.. டிஜிபி சைலேந்திர பாபு ‘திடீர்’ விளக்கம் !
ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு
1993 ஆம் ஆண்டு அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் இணைந்தனர்.
ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் மு.க ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர் பெண் கூட்டு பாலியல் கொடுமை.. உடந்தையாக இருந்த சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்
விருதுநகர், அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு : முடியவே முடியாது.. எச்சரித்த நீதிமன்றம் - மீண்டும் பரபரப்பு
பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது முறையாக பூஜையோடு துவங்கிய 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு! வைரலாகும் புகைப்படங்கள்.!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக பூஜை போடப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும்...
தங்கை நாடியாவின் திருமண புகைப்படங்களை பகிர்த ஆண்ட்ரியா..! கல்யாணத்தில் கூட கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!
நடிகை ஆண்ரியாவின் தங்கைக்கு தற்போது நடந்துள்ள நிலையில்... திருமண புகைப்படங்களை பகிர்ந்து, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும்...
இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள் ? சூப்பர் வேலைவாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது - முழு தகவல்கள் இதோ
மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியில் திடீரென வெடித்த ஏசி.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம் !
ஈரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையில் ஏசி திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்த இயக்குனர் லிங்குசாமி
செக் மோசடி வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய லிங்குசாமி சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார். மேலும் படிக்க
2 குழந்தைகளை அடித்தே கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.. குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்து கொன்று, தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட தாயினால் பரபரப்பு ஏற்பட்டது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை... இது மனித குலத்திற்கே அவமானம் என கொதித்தெழுந்த குஷ்பு
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குஷ்பு பதிவிட்டுள்ளதாவது : “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடனே வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்படக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் ஆகும். பில்கிஸ் பானு மட்டுமில்லை எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பார்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க
மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கு பள்ளி வேன் கொடுக்க வேண்டும்.? கல்வித்துறை சுற்றறிக்கையா? அண்ணாமலை ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வர வாகனங்களை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் வேஸ்ட்... விஜய் சேதுபதி தான் பெஸ்ட் - இந்தி ‘விக்ரம் வேதா’ டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விக்ரம் வேதா படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்கி உள்ளனர். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள படக்குழு நேற்று அதன் டீசரை வெளியிட்டது. மேலும் படிக்க
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க வலி தாங்க முடியல! கதறிய பெண்ணை விடாமல் கூட்டு பலாத்காரம்!சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளிர்பானம் குடித்து பஸ்சில் மயங்கிய சென்னை சிறுவன் தாயின் மடியில் பலி.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்.!
பேருந்தில் பயணம் செய்த போது குளிர்பானம் வாங்கி குடித்த சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவசம் குறித்து முடிவு எடுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: உச்ச நீதிமன்றம் கருத்து
இலவசங்கள் தொடர்பான வழக்கு குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம். பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய இலவசங்கள் குறித்து விவாதிக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.