Asianet News TamilAsianet News Tamil

ஹிருத்திக் ரோஷன் வேஸ்ட்... விஜய் சேதுபதி தான் பெஸ்ட் - இந்தி ‘விக்ரம் வேதா’ டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Vikram Vedha Teaser : விக்ரம் வேதா இந்தி டீசர் வெளியானது முதல் அதனை தமிழ் விக்ரம் வேதாவோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

Fans Trolled hrithik roshan and claims he is not suit for vijay sethupathi role in Vikram Vedha
Author
Tamil Nadu, First Published Aug 24, 2022, 1:56 PM IST

தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசான படம் விக்ரம் வேதா. இதில் விக்ரமாக நடிகர் மாதவனும், வேதாவாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இதில் விஜய் சேதுபதிக்கு வில்லத்தனமான வேடம் என்றாலும் அதனை செம்ம மாஸாக நடித்து அசத்தி இருந்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது அப்படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்கி உள்ளனர். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள படக்குழு நேற்று அதன் டீசரை வெளியிட்டது.

டீசர் வெளியானது முதல் அதனை தமிழ் விக்ரம் வேதாவோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விக்ரம் வேதா இந்தி டீசர்-ஐ விமர்சித்து ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... திடீரென சம்பளத்தை 3 மடங்கு உயர்த்திய விஜய்தேவரகொண்டா! ‘லைகர்’காக அவர் வாங்கிய சம்பளம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் ஹிருத்திக் ரோஷனை பார்க்கும் போது ஹீரோவாகவே தெரிகிறார். இது ஹீரோக்களுக்கு இடையே நடக்கும் சண்டை போல் உள்ளது. ஒரிஜினல் விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி அச்சுஅசல் வில்லனாக மிரட்டி இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், “நடிப்பு என்பது தோற்றம் மற்றும் பாடிபில்டிங் சம்பந்தப்பட்டது இல்லை என்பது அறிவு இருப்பவர்களுக்கு தெரியும். வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனை விட விஜய் சேதுபதி எவ்வளவோ மேல்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “விக்ரம் வேதா டிரைலர் மிகவும் ஏமாற்றம் அளித்தது. ஒரிஜினலில் இருந்த எமோஷன், பதற்றம் போன்ற சூழல்கள் இதில் சுத்தமாக இல்லை. விஜய் சேதுபதியின் நடிப்பை மிஞ்ச யாராலும் முடியாது. இதனால் தான் ஷாருக்கான் முதலில் இதில் நடிக்க மறுத்துவிட்டார் போல” என குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன் ஒருவரின் பதிவில், “விக்ரம் வேதா டீசர் பார்த்தேன். எனக்கு வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளது சுத்தமாக பிடிக்கவில்லை. விஜய் சேதுபதி அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால் ஹிருத்திக் ரோஷன் அதற்கு செட் ஆகவில்லை. பொதுவாக ஒரிஜினலை விட ரீமேக் சொதப்பலாக தான் இருக்கும். இது நன்றாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் போட்டுல்ல டுவிட்டில், “விக்ரம் வேதா டீசர் திருப்தி அளிக்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்தேன், ஆனால் ஒரிஜினல் அளவுக்கு இல்லை. ஹிருத்திக் ரோஷன் வேஸ்ட். விஜய் சேதுபதி ரோலுக்கு சுத்தமாக மேட்ச் ஆக வில்லை” என பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது டீசருக்கே இவ்வளவு ஒப்பீடு மற்றும் எதிர்ப்பு என்றால் படம் ரிலீசானால் என்னென்ன விமர்சனங்கள் வரப்போகிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்... ரத்தம் வரும் அளவிற்கு உதவி இயக்குனரை தாக்கிய சீரியல் நடிகர்... படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios