பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் 25 ஆம் தேதி வரை மாற்றம் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News live : தஞ்சை சாலை விபத்து: முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
Asianet Tamil News live : தஞ்சை சாலை விபத்து: முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Chennai : சென்னை மக்களே அலெர்ட்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம் - முழு விபரம்
வசூலில் விடுதலை, பத்து தல படங்களை தட்டித்தூக்கி முதலிடம் பிடித்த தசரா... மூன்றே நாளில் இம்புட்டு கலெக்ஷனா?
விடுதலை திரைப்படம் முதல் 2 நாட்களில் ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதேபோல் சிம்புவின் பத்து தல திரைப்படமும் ரிலீசான முதல் 3 நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ஆனால் இந்த இரண்டு படங்களை விட தசரா தான் அதிக அளவு வசூலை அள்ளி உள்ளது. மேலும் படிக்க
தமிழ்நாட்டில் 9 எம்.பி சீட்.. துணிவுடன் இறங்கிய பாஜக.. எல்.முருகன் சொன்ன புது கூட்டணி கணக்கு
வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
விடுதலை படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு... அத்துமீறி உள்ளே சென்றதால் வழக்குப்பதிவு
ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் பார்த்த பெண் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் பார்க்க
அடித்தது ஜாக்பாட்.!! வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்..? மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி- திமுகவை அலறவிட்ட இபிஎஸ்
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் அப்போது விடிவுக்காலம் வரும் நமக்கான எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல் நாளை விட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகும் விடுதலை - இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா!
விடுதலை படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூலித்து இருந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே விடுதலை படத்தின் வசூல் முதல் நாளை விட 15 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க
இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகத்தை ‘இந்திய ரூபாய்’ மதிப்பிலேயே இனி செய்யலாம்.! மத்திய அரசு தகவல்
இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகத்தை இந்திய ரூபாயின் மதிப்பிலேயே செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Rahul Gandhi : நான் வரேன்.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் ராகுல் காந்தி..!
சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் முதல் பைஜூஸ் வரை.. 70 கோடி பேர் டேட்டா மொத்தமா போச்சு - தமிழ்நாடும் லிஸ்ட்ல இருக்கு
24 மாநிலங்களை சேர்ந்த 70 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘விடுதலை’யில் செம்ம ரிஸ்க் எடுத்து நடித்ததற்காக மிகவும் கம்மியான சம்பளம் வாங்கிய சூரி... அதுவும் இவ்வளவு தானா!
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி, குறைந்த அளவிலான சம்பளத்தை மட்டுமே வாங்கி உள்ளாராம். மேலும் படிக்க
குருத்தோலை ஞாயிறு.. ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்.!!
சேலத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
என்னோடு நைட்டு வந்தவங்க இப்போ டாப் ஹீரோவா இருக்காங்க... படுக்கைக்கு அழைத்த பெண் குறித்து பிரபல நடிகர் ஓபன்டாக்
ஆடிசன் செய்ய வேண்டும் எனக்கூறி இரவு மசாஜ் செண்டருக்கு வருமாறு கேஸ்டிங் டிரைக்டர் ஒருவர் அழைப்பு விடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் பகீர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
கலாஷேத்திர மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு- தேடும் பணியில் போலீசார்
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் ஹரி பத்மன் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IPL : இனி ஐபிஎல் போட்டியை மெட்ரோ ரயில்நிலையங்களில் பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?
சென்னையில் மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு படம் பிளாப் ஆனால் இப்படியா அவமானப்படுத்துவது...! விருது விழாவில் நெல்சனுக்கு நேர்ந்த கொடுமை
டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன், விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க
மக்களே உஷார்.! தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது - எங்கெல்லாம் தெரியுமா?
இன்று 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பெருநிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோவதற்குப் பெயர்தான் திமுக அரசின் திராவிட மாடலா?- சீறும் சீமான்
அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள சீமான், மண்ணின் வளங்களை காப்பதற்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை மூலம் அச்சுறுத்தும் அதிகார அத்துமீறலை திமுக அரசு கைவிட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அனைத்து மதுபான கடைகளுக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பிற மாவட்டங்களில் இருந்து பிடுங்கி சென்னைவாசிகளுக்கு ஆவின் பால் விநியோகம்- பால் முகவர்கள் குற்றச்சாட்டு
சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என்றால் ஊடகங்கள் மூலம் அதிலும் சமூக வலைதளங்களில் பிரச்சினை பெரிதாகி விடுவதால் அதனை சரி செய்ய வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.