ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அனைத்து மதுபான கடைகளுக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மகாவீரர் கிமு 599 இல் சைத்ரா மாதத்தின் சுக்லா பக்ஷத்தின் 13 ஆம் தேதி பிறந்தார். எனவே சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள் மகாவீர் ஜெயந்தியை இந்த தேதியில் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு 04. 04. 2023 (செவ்வாய் கிழமை) அன்று ஒருநாள் மட்டும் அனைத்து மதுபான கடைகளுக்கும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு 04. 04. 2023 (செவ்வாய் கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா