MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளை விட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகும் விடுதலை - இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா!

முதல் நாளை விட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகும் விடுதலை - இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2023, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், தமிழ், சேத்தன், வேல்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அப்படத்தின் முதல்பாகம் கடந்த மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இத்திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இதுவும் வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ் என கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ‘விடுதலை’யில் செம்ம ரிஸ்க் எடுத்து நடித்ததற்காக மிகவும் கம்மியான சம்பளம் வாங்கிய சூரி... அதுவும் இவ்வளவு தானா!

34

விடுதலை படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூலித்து இருந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே விடுதலை படத்தின் வசூல் முதல் நாளை விட 15 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

44

அதன்படி இப்படம் நேற்று மட்டும் ரூ. 7.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக கலெக்‌ஷன் அள்ளி உள்ள விடுதலை திரைப்படம் இன்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் இன்றைய வசூலும் முதல் இரண்டு நாட்களை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விடுதலை படத்துக்கு கிடைக்கும் வரவேற்பால் அப்படத்திற்கு தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... ஒரு படம் பிளாப் ஆனால் இப்படியா அவமானப்படுத்துவது...! விருது விழாவில் நெல்சனுக்கு நேர்ந்த கொடுமை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரி (நடிகர்)
வெற்றிமாறன்
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved