Rahul Gandhi : நான் வரேன்.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் ராகுல் காந்தி..!
சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிறகு இந்த நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
சட்டப்படி, எந்த உயர் நீதிமன்றமும் தண்டனையை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது தண்டனையின் அளவைக் குறைக்காவிட்டாலோ, ராகுல் காந்தி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நான்கு ஆண்டுகளாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வயநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
இந்த நிலையில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி நாளை சூரத் செல்ல உள்ளார் என்றும், நீதிமன்றத்தில் எந்த மாதிரியாக முறையிட வேண்டும் என்பதற்கு தயாராக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு