நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தசரா திரைப்படம் வசூலில் விடுதலை மற்றும் பத்து தல படங்களை முந்தி முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் சிம்பு நடித்த பத்து தல மற்றும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அப்படங்களுக்கு போட்டியாக நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா திரைப்படமும் ரிலீஸ் ஆனது. ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். தெலுங்கில் உருவான இப்படம் கடந்த மார்ச் 30-ந் தேதி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
மேற்கண்ட மூன்று படங்களுக்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வந்ததால் இப்படங்கள் வசூலில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி விடுதலை திரைப்படம் முதல் 2 நாட்களில் ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதேபோல் சிம்புவின் பத்து தல திரைப்படமும் ரிலீசான முதல் 3 நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ஆனால் இந்த இரண்டு படங்களை விட தசரா தான் அதிக அளவு வசூலை அள்ளி உள்ளது.
இதையும் படியுங்கள்... முதல் நாளை விட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகும் விடுதலை - இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா!
தசரா திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ.71 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூல் என்கிற மைல்கல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை மற்றும் பத்து தல படங்களைவிட தசரா அதிகளவில் வசூலித்ததற்கு முக்கிய காரணம் இப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது தான்.
இதையும் படியுங்கள்... விடுதலை படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு... அத்துமீறி உள்ளே சென்றதால் வழக்குப்பதிவு
