10:20 PM (IST) May 04

இந்திய விவாத நிகழ்ச்சிகளில் பாகிஸ்தானியர்கள் பங்கேற்கத் தடை

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய செய்தி சேனல்களில் பாகிஸ்தானியர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
09:24 PM (IST) May 04

சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் தேர்வு; பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க
09:08 PM (IST) May 04

சென்னையில் சூறைக்காற்று! தியேட்டர் கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரை பலத்த காற்று மற்றும் கனமழையால் இடிந்து விழுந்தது. பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் ஈவிபி திரையரங்கம் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க
08:15 PM (IST) May 04

புனே - சென்னை இடையே புதிய ரயில்: அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!!

மேற்கு ராஜஸ்தானை புனே மற்றும் சென்னையுடன் இணைக்கும் புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். புனேயின் ரயில்வே திறனை இரட்டிப்பாக்கும் முதன்மைத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

மேலும் படிக்க
08:08 PM (IST) May 04

ஹவுதி ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி; இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பென் குரியன் விமான நிலையம் அருகே ஹவுத்தி ஏவுகணை விழுந்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பல தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க
07:56 PM (IST) May 04

டெல் அவிவ் விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணை விழுந்ததால், டெல்லி-டெல் அவிவ் விமானம் அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மே 6 வரை விமான சேவையை நிறுத்திவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
07:03 PM (IST) May 04

129 வயது யோகா குரு பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா மறைவு

129 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு சுவாமி சிவானந்தா வாரணாசியில் காலமானார். எளிமை மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்ததற்காக அறியப்பட்ட அவர், தேசியத் தலைவர்கள் உட்பட பல தலைமுறையினருக்கு உத்வேகமாக இருந்தார்.

மேலும் படிக்க
06:17 PM (IST) May 04

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. ஏற்றுமதி உத்திகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க
05:54 PM (IST) May 04

பயமா? திமுகவுக்கா? அது அகராதியிலேயே கிடையாது! வைகோவின் நச் பதில்!

ஸ்டாலின் மத்திய அரசு அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க
05:54 PM (IST) May 04

Spam கால்கள் உங்களை எரிச்சல் படுத்துகிறதா? வெறும் 1 கிளிக் போதும் மேட்டர் ஓவர்

ஜியோ, ஏர்டெல், வி, பிஎஸ்என்எல் என எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் ஸ்பேம் அழைப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

மேலும் படிக்க
05:53 PM (IST) May 04

வங்கதேசத்தவர்களை உடனே வெளியேற்றிடுக.! தமிழக அரசுக்கு தேதி குறித்த பாஜக

காஷ்மீர் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றக் கோரி பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க
05:47 PM (IST) May 04

காட்டடி அடித்த ஆண்ட்ரே ரசல்! ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த KKR

ஐபிஎல் போட்டியில் ரசல், ரகுவன்ஷி அதிரடி ஆட்டத்தால் கேகேஆர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 206/4 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க
05:34 PM (IST) May 04

வெறும் ரூ.60000ல் சிறந்த மைலேஜ் பைக்: TVS Sports ES+

குறைந்த விலையில் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பைக்கைத் தேடுபவர்களுக்கு டிவிஎஸ் ஸ்போர்ட் ES+ சிறந்த தேர்வாகும். சிறந்த மைலேஜ், வசதிகள் மற்றும் ஸ்டைலிங் ஆகியவை இந்த பைக்கை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. அன்றாட பயணத்திற்கு ஏற்ற இந்த பைக் ரூ.60,881க்குக் கிடைக்கிறது.

மேலும் படிக்க
05:27 PM (IST) May 04

சென்னையை புரட்டி போட்ட பேய் காற்று! அச்சத்தில் வீட்டில் முடங்கிய மக்கள்! வெதர்மேன் வார்னிங்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. 15 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க
05:17 PM (IST) May 04

பெண்ணின் ஆபாசப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் கைது

நீச்சல் பயிற்சிக்கு வந்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக நீச்சல் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பாலாஜியின் காதலை ஏற்க மறுத்ததால், அந்தப் பெண்ணின் சில புகைப்படங்களை ஆபாச படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க
05:16 PM (IST) May 04

27 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள், 7 இருக்கைகள் இருந்தும் போனியாகாத Maruti Suzuki Eeco

27 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள், மாருதியின் இந்த 7 இருக்கை காரை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை, காரணம் தெரியுமா?

மேலும் படிக்க
05:12 PM (IST) May 04

படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்.! அலறும் தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 34 தமிழக மீனவர் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் எனக் கண்டிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க
04:55 PM (IST) May 04

மேக்ஸ்வெலுக்கு பதிலாக 39 பந்தில் சதம் விளாசிய வீரரை சேர்த்த பஞ்சாப் கிங்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயம் அடைந்த கிளைன் மேக்ஸ்வெலுக்கு பதிலாக 39 பந்தில் சதம் விளாசிய மிட்ச் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
04:46 PM (IST) May 04

799 ரூபாய்க்கு விமானப் பயணம்! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி தெரியுமா.?

குறைந்த கட்டண விமான டிக்கெட் முன்பதிவு சூட்சுமங்கள்: விமான டிக்கெட்டுகளின் விலையைக் கண்டு ரயில் அல்லது வேறு வழிகளைத் தேடுகிறீர்களா? இனி தேவையில்லை! ₹5,000 மதிப்புள்ள விமான டிக்கெட்டை வெறும் ₹799-க்கு முன்பதிவு செய்ய உதவும் 5 சூட்சுமங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
04:26 PM (IST) May 04

Hyundai Creta முதல் Baleno வரை: ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்கள்

ஏப்ரல் 2025 இல் இந்திய ஆட்டோ சந்தையில் மலிவு விலை மற்றும் ஆடம்பரம் கலந்த கார்கள் அதிகம் விற்பனையாகின. எம்பிவி, ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி வகை கார்களுக்கு அதிக தேவை இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் பற்றி தெரிந்து கொள்வோ

மேலும் படிக்க