வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. ஏற்றுமதி உத்திகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையத்தின் (APEDA) வர்த்தகச் செயலாளர் வர்த்தகச் செயலாளர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்தனைத் திருவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தினார். விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இரண்டும் காலத்தின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி உத்திகள்:
மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கொள்கை வல்லுநர்கள், வேளாண் வர்த்தகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் (MoFPI) செயலாளர் சுப்ரதா குப்தா பேசுகையில், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் தொடரபான சுகாதார தரநிலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் மத்தியில் அதிக ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
14 மாநிலங்கள் பங்கேற்பு:
இந்த சிந்தனைத் திருவிழாவில் வணிகத் துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் செயலாளர் வர்ஷா ஜோஷி மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை புதிய புவியியல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு பங்குதாரர்களிடையே மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை அகர்வால் வலியுறுத்தினார்.
ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் என மொத்தம் 14 மாநிலங்கள் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றன. அமுல், ஐடிசி, ஆர்கானிக் இந்தியா, எல்.டி. ஃபுட்ஸ், உள்ளிட்ட வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


