MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பஹல்காம் தாக்குதல்! இந்திய விவசாயிகள் எடுத்த முடிவு! கதிகலங்கிய பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல்! இந்திய விவசாயிகள் எடுத்த முடிவு! கதிகலங்கிய பாகிஸ்தான்!

கர்நாடக மாநிலம் கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

2 Min read
Author : Rayar r
Published : May 02 2025, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

 Farmers stopped exporting tomatoes to Pakistan: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தான் உடனான வர்த்தக தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தியது. 

24
Farmers stopped exporting tomatoes to Pakistan

Farmers stopped exporting tomatoes to Pakistan

பாகிஸ்தானுக்கு தக்காளி நிறுத்தம் 

இந்நிலையில், இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். 
அதாவது கர்நாடக மாநிலம் கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். கோலாரின் APMC சந்தை ஆசியாவின் இரண்டாவது பெரிய தக்காளி சந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதனால்தான் கோலார் மாவட்டத்தில் விளையும் தரமான தக்காளி, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

900 டன் தக்காளி ஏற்றுமதி 

ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் தக்காளி அறுவடை காலம். இந்த நேரத்தில், கோலாரின் தக்காளி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.  இதில், பாகிஸ்தானுக்கு வழக்கமாக வாரத்திற்கு 800 முதல் 900 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டது. தக்காளி, மாம்பழம் மற்றும் பிற காய்கறிகளையும் ஏற்றுமதி செய்து வந்தனர். 
 

Related Articles

Related image1
பஹல்காம் தாக்குதலுக்கு முன் 3 சுற்றுலா இடங்களை தேர்வு செய்த தீவிரவாதிகள்- வெளியான ஷாக் தகவல்
Related image2
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறது? இந்தியாவின் பலம் என்ன?
34
Tomatoes, Karnataka Farmers

Tomatoes, Karnataka Farmers

விவசாயிகள் ஒருமனதாக முடிவு 

கோலாரில் இருந்து சுமார் 42 மணி நேரப் பயணத்தில், லாரிகள் மற்றும் டெம்போக்கள் மூலம் சாலை வழியாக பாகிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பாகிஸ்தான் மற்றும் பல்வேறு அண்டை நாடுகளுக்கு அங்குள்ள வர்த்தகர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று வந்தனர். இப்போது பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையின் பின்னணியில், இங்குள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு தக்காளி விநியோகம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர் என்று CMR மண்டி உரிமையாளரும் JDS தலைவருமான CMR ஸ்ரீநாத் கூறுகிறார்.

44
India vs Pakistan

India vs Pakistan

பாகிஸ்தானுக்கு ஒரு தக்காளியும் கொடுக்க மாட்டோம்

புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோதும் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்தோம். ஆனால், மற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் போது மனிதாபிமான அடிப்படையில் தக்காளியைக் கொடுத்தோம். ஆனால், இப்போது எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஒரு தக்காளியைக் கூட பாகிஸ்தானுக்குக் கொடுக்க மாட்டோம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
பஹல்காம் தாக்குதலுக்கு முன் 3 சுற்றுலா இடங்களை தேர்வு செய்த தீவிரவாதிகள்- வெளியான ஷாக் தகவல்
Recommended image2
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறது? இந்தியாவின் பலம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved