- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையை புரட்டி போட்ட பேய் காற்று! அச்சத்தில் வீட்டில் முடங்கிய மக்கள்! வெதர்மேன் வார்னிங்!
சென்னையை புரட்டி போட்ட பேய் காற்று! அச்சத்தில் வீட்டில் முடங்கிய மக்கள்! வெதர்மேன் வார்னிங்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. 15 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்னி நட்சத்திரம்
தலைநகர் சென்னையில் நடந்த சில நாட்களே காலை முதலே வெயில் சுட்டெரித்த வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இதனிடையே இன்று முதல் மே 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கியதால் வெயில் எப்படி இருக்குமோ என புலம்ப ஆரம்பித்தனர்.
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கருர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை காற்றுடன் கூடிய மழை
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென இருள் சூழ்ந்தது. இதனையடுத்து பலத்த காற்றுடன் சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம், பரங்கிமலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
அடுத்த மூன்று மணி நேரத்திற்காக அதாவது மாலை 7 மணி வரை சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது சென்னையில் மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்பே தூசி மற்றும் காற்று. புயல்கள் நகரின் வடமேற்கிலிருந்து அதாவது அம்பத்தூர் ஆவடி ரெட்ஹில்ஸ் பெல்ட் வழியாக நகர்கின்றன. பலத்த காற்று வீசும் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் வாகனத்தை மரத்தின் கீழ் நிறுத்த வேண்டாம். அதிக இடி மற்றும் மின்னல் இருக்கும்.
என தெரிவித்துள்ளார்.