MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவை மட்டுமல்ல இன்றைக்கு 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை! வானிலை மையம்!

கோவை மட்டுமல்ல இன்றைக்கு 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை! வானிலை மையம்!

தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : May 04 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கத்திரி வெயில்

கத்திரி வெயில்

தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கருர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அதேபோல் மே 6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மே 7 முதல் 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

45
வெப்ப அளவின் வேறுபாடு

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்
கோடைக்காலம்
கனமழை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?
Recommended image2
கோடையில் உடற்பயிற்சி செய்யும்போது நீரிழப்பை தடுக்கும் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved